Homeசெய்திகள்சினிமாமகிழ் திருமேனி, அஜித் கூட்டணியின் 'விடாமுயற்சி' ஷுட்டிங் அப்டேட்

மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியின் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் அப்டேட்

-

அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தனது 62 ஆவது படமான ‘விடாமுயற்சி‘ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

அஜித் இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் பெரிய நட்சத்திரங்களை, மகிழ் திருமேனி இப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் “EFFORTS NEVER FAIL” என்று குறிப்பிட்டிருப்பதால் இந்த படம் வெறித்தனமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் புனே பகுதியில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ