spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி'யில் இதுவரை காணாத மிரட்டலான தோற்றத்தில் அஜித்!

‘விடாமுயற்சி’யில் இதுவரை காணாத மிரட்டலான தோற்றத்தில் அஜித்!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் எச்.வி வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு‘ படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. துணிவு படத்தை தொடர்ந்து AK 62 படத்தை யார் இயக்குகிறார் என்ற எதிர்பார்ப்புக்குப் பிறகு அஜித்தின் பிறந்த நாளான கடந்த மே 1-ம் தேதி இது குறித்து தகவல் வெளியானது.

அஜித்தின் AK62 விற்கு அவரின் ‘வி’ சென்டிமென்டில் ‘விடாமுயற்சி‘ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

we-r-hiring

அஜித்தின் உலக சுற்றுப்பயணம் முடிந்த பின்பு இப்படம் தொடங்க இருக்கிறார். அஜித் இப்படத்திற்காக தாடி எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே அஜித் இப்படத்தில் ஒரு மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் “EFFORTS NEVER FAIL” என குறிப்பிட்டு இருந்தது. இதனால் இப்படம் வெறித்தனமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனியின் தடையறத் தாக்க, தடம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றது. அதன் பின் அவர் இயக்கிய கழகத் தலைவன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தமிழ் திரை உலகில் இவரை திரும்பி பார்க்க வைக்கும் என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ