அஜித் நடிப்பில் தற்போது உருவாகவிருக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடா முயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் இந்த ‘V சென்டிமென்ட்’-ஐ தீவிரமாகப் பின்பற்றி வருவதால் இந்தப் படம் V எழுத்தில் துவங்குமாறு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது விடா முயற்சி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. வரும் மே 22-ம் தேதி முதல் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடைசி கட்டத்தில் இருக்கின்றனவாம். அஜித் குமார் இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவார் என்று கூறப்படுகிறது. அஜித் குமார் நவம்பர் மாதம் உலகளவில் பைக் சுற்றுலா செல்ல இருக்கிறார். அதற்கு முன்பாகவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும். அடுத்த ஆண்டு கோடையில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் இதுவரை கிடைக்கவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அவர் விலகினார். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இணைந்துள்ளார்.