Homeசெய்திகள்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – பாஜக, இந்து முன்னணியினர் இனிப்பு...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – பாஜக, இந்து முன்னணியினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை வரவேற்று, திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் முன்பு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – பாஜக, இந்து முன்னணியினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

அப்போது, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”, “வெற்றிவேல் வீரவேல்” என முழக்கமிட்ட அவர்கள், கோயில் முன்பு தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அங்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி நிர்வாகி வேல்முருகன், பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் போராட்டத்திற்கு இன்றைய தீர்ப்பு ஒரு முடிவைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தீபத்தூண் தொடர்பாக நீதியரசர் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தீபம் ஏற்றுவதற்காகப் பல்வேறு அமைப்புகள் போராடியதாகவும், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் இதற்கான திட்டமிடலில் முக்கியப் பங்காற்றியதாகவும் கூறினார். மேலும், காவல்துறை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீப நிகழ்வைத் திருப்பரங்குன்றம் பகுதி மக்களும், மதுரை மாவட்ட மக்களும் காண உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் : தீபம் ஏற்ற அனுமதி.. பொதுமக்களுக்கு தடை – தேவைப்பட்டால் CISF பாதுகாப்பு!

MUST READ