Homeசெய்திகள்உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதா? – அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் நிதி தாமதம்; தவெக அரசுக்கு...

உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதா? – அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் நிதி தாமதம்; தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

-

- Advertisement -

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதா? – அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் நிதி தாமதம்; தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், உதவித்தொகை கிடைக்காததால் கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

365 மாணவர்கள் தேர்வு – 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை!

இந்த ஆண்டில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மொத்தம் 365 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் 64 பேருக்கு மட்டுமே இதுவரை கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டும் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பில் வரவில்லை, மெயில் வரவில்லை எனக் கூறுவதா?

மாணவர்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுடன், பில் வரவில்லை, மெயில் வரவில்லை எனக் கூறி மாணவர்கள் மீதே பழி சுமத்தப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபோன்ற காரணங்களைக் கூறி மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வெளிநாட்டுக் கல்விக் கனவு பாதிக்கப்படாமல் இருக்க, நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்: 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே நிதி விடுவிப்பு? – தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

MUST READ