spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபைக் சுற்றுப்பயணத்தை திரைப்படமாக உருவாகும் அஜித்!

பைக் சுற்றுப்பயணத்தை திரைப்படமாக உருவாகும் அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தனது பைக் சுற்றுப்பயணத்தை திரைப்படமாக உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர். படங்கள் நடிப்பதை தாண்டி அஜித் அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

we-r-hiring

அந்த வகையில் வலிமை மற்றும் துணிவு படப்பிடிப்பின் போது பல இடங்களுக்கு அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் தனது பயணங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த விரும்பியுள்ளார். அதன்படி ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அஜித்தின் சுற்றுப்பயணங்களை ஆவணப்படுத்தி வருகிறார். அதன் முதல் பாகம் முடிக்கப்பட்டு அஜித் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இரண்டாம் பாகம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அஜித் இந்த ஆவணப்படத்தை தனது சொந்த விருப்பத்திற்காக மட்டுமே தயாரித்து வருகிறார். எனவே இது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி படத்தில் இணைந்துள்ளார்.

 

MUST READ