- Advertisement -
ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
ரயில்வேயில் 9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு காங்கிராஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து ஒடிசா பாலசோர் ரயில் விபத்து உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய ரயில்வேயில் 4% வழித்தடங்களில் மட்டும் கவச் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது ஏன்? ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்? ரயில்வேயில் 9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்?
1990-களில் 18 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்? பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களில் 3.18 லட்சம் பேரை ஒப்பந்த ஊழியராக வைத்திருப்பது ஏன்? குறிப்பிட்ட பணி நேரத்துக்கு அதிகமாக ரயில் ஓட்டுநர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்? ரயில் ஓட்டுநர்களின் சுமையை அதிகரிப்பது விபத்துக்கு வழிவகுக்கும் என்பது தெரியாதா?
ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? மைசூர் அருகே கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி ரயில் விபத்து ஏற்பட்டபோது, தென்மேற்கு மண்டல ரயில்வே அதிகாரி சிக்னல் கட்டமைப்பில் கோளாறு உள்ளது பற்றி எச்சரித்த பிறகும் ரயில்வே செயற்று இருந்தது ஏன்? ரயில்வே பாதுகாப்பு ஆணைய பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியதற்காக ரயில்வே துறையை நாடாளுமன்ற நிலைக்குழு கண்டித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாதது ஏன்? ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.