
சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச் செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில், உள்நாட்டில் சீலிங் ஃபேன்களுக்கான தரக் கட்டுப்பாட்டு விதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, பிஐஎஸ் சான்று இல்லாமல், சீலிங் ஃபேன்களை உற்பத்திச் செய்யவோ, விற்கவோ கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை முதல் முறை மீறுபவர்களுக்கு சுமார் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் உள்ளிட்டத் தண்டனைகள் விதிக்கப்படும். தற்போதைய நிலையில், சீலிங் ஃபேன்களுக்கு பிஐஎஸ் சான்றுக் கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!
புதிய விதியை நடைமுறைப்படுத்த வசதியாக ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.