தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.


தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ். கட்சி தடம் மாறியதால் தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சி தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தெரிவித்தாா்.
பி.ஆர்.எஸ் (BRS – Bharat Rashtra Samithi) என்பது தெலங்கானா மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். கே. சந்திரசேகர் ராவ் அவர்களால் 2001-ல் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (TRS) எனத் தொடங்கப்பட்டு, பின்னர் பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS) எனப் பெயர் மாற்றப்பட்டது. தெலங்கானா தனி மாநில போராட்டத்திலும், மாநிலத்தின் முதல் ஆட்சியை அமைப்பதிலும் (BRS) கட்சி முக்கியப் பங்கு வகித்தது.
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா முன்னாள் எம்.பி.யாக பணியாற்றியவர். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த கவிதா, ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கினாா். பொதுப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்தாா். இதற்கிடையில் தெலுங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து நீண்ட ஆலோசனைகள் நடத்தினாா்.
தற்போது முன்னாள் முதல்வர் க. சந்திரசேகர ராவ் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளாா். அதற்கு தெலங்கானா ராஷ்டிர சேனா (TRS) எனப் பெயரிட்டுள்ளாா்.
இது தெலங்கானா மாநில தனிநபர் அடையாளத்தையும், போராட்ட கால உணர்வுகளையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகப் பார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தெலங்கானா மாநில உருவாக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட தியாக உணர்வும் மாநில அடையாளத்தையும் மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்தாா். பி.ஆர்.எஸ் (BRS) எனப் பெயர் மாற்றிய பிறகு, கட்சிக்கும் மக்களுக்குமான அந்த தெலங்கானா உணர்வு குறைந்துபோனதாக விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடியாக தெலங்கானா ராஷ்டிர சேனா (TRS) எனப் பெயரிட்டுள்ளாதாக தெரிவித்தாா்.
இதையொட்டி மேட்சல் மாவட்டம் முஷிராபாத்தில்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கவிதா தனது கட்சியின் பெயரை அறிவித்தார். பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், இன்று என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும். தெலங்கானாவின் எதிர்காலத்தை மாற்றி எழுத நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். தனது தந்தை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா இயக்கத்தின் தேர் வழிதவறிவிட்டது.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு மக்கள் நலனில் துளியும் அக்கரை இல்லை. சமூக நலன் கொண்ட கட்சியின் சக்கரம் உடைந்து விட்டது. புதிய மாநிலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் சரியாகச் செயல்படவில்லை. தெலங்கானா எனும் தனி மாநிலம் அமைந்தால் அடிமைத்தனத்தின் விலங்குகள் அகற்றப்படும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை.
நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதைக் கொண்டு மட்டுமே நாம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். எந்தவொரு கட்சிக்கும் ஆண்மாவும் பின்னணியும் இருக்க வேண்டும். பி.ஆர்.எஸ் தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும், அது தனது ஆன்மாவை இழந்துவிட்டது. பி.ஆர்.எஸ் தனது ஆன்மாவை இழந்து விட்டதால் தெலங்கானா ராஷ்டிர சேனா வந்துள்ளது என்று தெரிவித்தாா்.
நான் தெலங்கானாவில் உள்ள 3.5 கோடி மக்களுக்குத் தாயாக விரும்புகிறேன். தாய்மையுடன் ஆட்சி செய்தால் மட்டுமே பிள்ளைகள் கஷ்டங்களைச் சமாளிக்க முடியும். தெலங்கானாவில் பல ஆண்டுகளாக நிலப்பிரபுத்துவ முறை இருந்து வந்தது. பல மாபெரும் மனிதர்கள் போராடினார்கள், ஓரளவு சமத்துவம் கிடைத்தது. கே. சந்திர சேகர் ராவும் சமூக ஆர்வலர்களும் இயக்கம் அமைத்து போராடினார்கள், ஒரு புதிய மாநிலம் உருவானது. போராட்டங்களையும் அரசியல் சக்தியையும் இணைப்பதன் மூலம் சமூக நீதி நிறைந்த தெலங்கானாவை நாம் அடைவோம் என்று மேலும் அவர் கூறினாா்.
பாஜக சமூக நீதியின் தீவிர எதிரி. தெலங்கானா மாநில பாஜக எம்.பி.க்களுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் தெலங்கானா மாநில தாயின் குழந்தை என்றால் ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது திரும்பக் மீட்க வேண்டும்.
பாஜக குறிக்கோள் சாமானியர்களுக்கு எதுவும் கிடைக்கக்கூடாது. எனவே இந்த மூன்று கட்சிகளுக்கு எதிராக போராட தயாராக வேண்டும். எனவே இனி இந்த மூன்று கட்சிகளுக்கு எதிராக தெலங்கானா ராஷ்ட்ரிய சேனாவின் தொண்டர்கள் போராட தயாராக இருக்க வேண்டும் என்று கவிதா கேட்டுக்கொண்டார்.
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
