Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு

-

பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இடைக்கால அரசு பொறுப்பேற்ற நிலையிலும் வங்கதேசத்தில் முழுமையான அமைதி திரும்பவில்லை.

குறிப்பாக வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களான இந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக இந்தியா தனது கவலை தெரிவித்திருந்ததுடன் இந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்கவும் வலியுறுத்தியது.

இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முகமது யூனுஸ் உறுதி அளித்தார்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

இந்த உரையாடலின்போது அமைதியான மற்றும் முற்போக்கு வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு உண்டு என மோடி தெரிவித்தார். மேலும் வங்கதேசத்தில் தற்போதைய நிலவரம் குறித்து இருதரப்பு கருத்துகள் பகிரப்பட்டன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ