திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை
திருப்பதி மலை பாதையில் நடந்து செல்ல 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் உள்ள நடைப்பாதையில் 6 வயது சிறுமி லட்ஷிதாவை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது. இதனால் மலைப்பாதையில் குழந்தைகள் மீதான வன விலங்குகளின் தாக்குதல் சம்பவத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். அதன்படி இனி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாகனங்கள் செல்லும் இரண்டு மலைப்பாதை சாலைகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். மீண்டும் தேவஸ்தான அதிகாரிகள் புதிய முடிவை எடுக்கும் வரை இந்த இரண்டு செயல்திட்டம் அமலில் இருக்கும். இந்தப் பிரச்னை தீரும் வரை பக்தர்கள் தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.