Homeசெய்திகள்இந்தியாநிதி முறைகேடு புகார்... ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது

நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது

-

நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, மருத்துவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

doctor

இந்த நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ஆர்.ஜி. கர் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் மேறகொண்டிருந்தனர். இந்த நிலையில், நிதி மோசடியில் ஈடுபட்ட புகாரில் ஆர்.ஜி. கர் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.

kolkata

மருத்துவமனையில் இருந்த ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்தது, மருத்துவக்கழிவு விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

 

 

MUST READ