Homeசெய்திகள்இந்தியாபருப்பு விலை உயர்வைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

பருப்பு விலை உயர்வைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

-

 

தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!
File Photo

பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் கையிருப்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மத்திய அரசு வரும் டிசம்பர் 3- ஆம் தேதி நீட்டித்துள்ளது.

போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு, வெங்காயத்துக்கு வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், பருப்பு வகைகள் இருப்பு வைப்பதற்கும் மொத்த வணிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பதுக்கலைத் தடுக்கும் வகையில், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அது வரும் அக்டோபர் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாடு வரும் டிசம்பர் 03- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு

பருவமழை போதிய அளவு பெய்யாததால், நாடெங்கும் பருப்பின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

MUST READ