spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது"- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

-

- Advertisement -

 

"திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது"- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

we-r-hiring

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனது பணிகள் குறித்து பேசியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மக்களவைத் தேர்தலில் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவாரா? என்று கேள்வியும் எழுந்தது.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். தெலுங்கானா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அரசியல் நிலவரம், தமிழகம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், பட்ஜெட்டில் புதிய திட்டங்களைக் கொண்டு வருவது குறித்தும் விவாதித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ