Homeசெய்திகள்இந்தியாமக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

-

நாடாளுமன்ற தேர்தல்

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதேபோல் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து பத்தாண்டு காலமாக ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019ஐ விட 2024 தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 6% உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

MUST READ