
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
வெற்றிகரமான 3வது வாரத்தில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’… உணர்ச்சிவசப்பட்ட நடிகர் சதீஷ்!
விஐபி தரிசனம் மூலம் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை வழிபட்டு தரிசித்து வருகின்றனர். காலை 06.00 மணி முதல் இலவச தரிசனம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
தளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்… ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?
அதேபோல், தமிழகத்தில் புகழ்பெற்ற திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 04.00 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.