Homeசெய்திகள்இந்தியா"இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு"- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

“இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

-

 

"இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு"- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
Video Crop Image

இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வரும் டிசம்பர் மாதத்துடன் இலவச ரேஷன் திட்டம் முடிவடையவுள்ள நிலையில், இந்த திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த அறிவிப்பு மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஏழை, எளிய மக்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை என்றும், மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஒவ்வொன்றாக பா.ஜ.க. தலைமையிலான அரசு தீர்த்து வருகிறது. தன்னையும், ஓபிசி பிரிவினரையும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 07, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

MUST READ