
ஆண்டுதோறும் 20,000 பயணிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரயில் மூலம் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு சத்தீஷ்கர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாட்டின் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சன்னியாசிகள் மற்றும் மடாதிபதிகள் என சுமார் 8,000 பேருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான்-பிரதிஷ்தா விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்கும். வாரணாசியைச் சேர்ந்த மதகுரு லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22-ஆம் தேதி முக்கிய சடங்குகளைச் செய்வார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22 வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் 20,000 பயணிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரயில் மூலம் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு சத்தீஷ்கர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நடந்து முடிந்த சத்தீஷ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால் ராமர் கோவிலுக்கு இலவச ரயில் சேவை ஏற்பாடு செய்து தரப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், இலவச ரயில் பயண திட்டத்திற்கு சத்தீஷ்கர் அரசு ஓப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 20,000 பயணிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரயில் மூலம் இலவசமாக பயணிக்கலாம்.