Homeசெய்திகள்இந்தியாஇமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை... ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

-

- Advertisement -

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

 

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பியாஸ், பார்வதி உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையில் சிக்கி 36 பேர் மாயமாகினர். இதேபோல் மண்டி பகுதியிலும் ஏற்பட்டுள்ள மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.

https://x.com/AHindinews/status/1818871908743393485

தகவலின் பேரில் சம்பவ பகுதிகளுக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 3 பேரின் சடலஙகள்மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

MUST READ