Homeசெய்திகள்இந்தியாஇடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

-

 

இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின.

விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த சிறுத்தைகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி – திருமாவளவன்!

இதையடுத்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மத்திய பட்ஜெட் சிறப்பானது; எளிய மக்கள், பெண்களுக்கானது. பெண்களை கோடீஸ்வரர்கள் ஆக்கும் புதிய திட்டம் சிறப்பானது. ரேஷன் கடைத் திட்டத்தின் மூலம் சாமானியர்கள் பயன்பெறுவர். வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்.

ஏழைகளையும், விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட் இது. சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள் இலவச மின்சார சேவையைப் பெற முடியும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பழனி கோவில் தொடர்பான தீர்ப்பு – தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வலுச் சேர்க்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

MUST READ