Homeசெய்திகள்இந்தியாகுஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க?-மார்க்கண்டேய கட்ஜு

குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க?-மார்க்கண்டேய கட்ஜு

-

குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி ?

நடிகை குஷ்புவிடன் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சமுக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது நெட்டிசன்கள் பார்வையை ஈர்த்துள்ளது.

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதியும் , இந்திய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு பணி ஓய்வுக்கு பிறகு சமூக வலைதள பதிவுகள் மூலம் அதிகம் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி தேர்தலில் கிரண் பேடிக்கு பதிலாக ஷாஜியா இல்மியை வேட்பாளராக நிறுத்தி இருந்தால் பாஜக வெற்றி பெற்று இருக்கும்! காரணம் கிரண் பேடியை விட ஷாஜியா இல்மி அழகானவர் என கூறியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

இதற்கு பின்னர் சமூக வலைதளங்கள் பக்கம் வராத கட்ஜு சமீப காலமாக மீண்டும் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளார்.

நடிகையும்,  அரசியல் பிரமுகரான குஷ்பு “வலியை குணபடுத்த சிறந்த மருந்து சிரிப்பு” என பதிவிட்டு டுவிட்டரில் நீளமான கூந்தலுடன் புகைபடத்தை பதிவிட்டார். இதற்கு பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில், குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என கட்ஜு கேள்வி ஏழுப்பியுள்ளார்.

MUST READ