Homeசெய்திகள்இந்தியாமொராக்கோ நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழப்பு- பிரதமர் இரங்கல்

மொராக்கோ நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழப்பு- பிரதமர் இரங்கல்

-

மொராக்கோ நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழப்பு- பிரதமர் இரங்கல்

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

At least 296 reported dead as powerful earthquake hits Morocco | Earthquakes  News | Al Jazeera

இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் கூறியதாவது, “மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். இந்த துயரமான நேரத்தில், மொரோக்கோ மக்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

"மணிப்பூர் சம்பவத்தால் எனது இதயம் கனத்துள்ளது"- பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
Photo: PM Narendra Modi

மொராக்கோவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

MUST READ