Homeசெய்திகள்இந்தியாநீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!​

நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!​

-

- Advertisement -

​நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளதாக பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.​நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!​

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தீவிரமாகப் பணியாற்றிய தர்மேந்திர பிரதானை, முதலமைச்சர் ஆக்காமல் மீண்டும் மத்திய அமைச்சரவையிலேயே வைத்திருந்தனர். ​இதன் காரணமாக தீவிர அரசியல் விரக்தியில் இருக்கும் தர்மேந்திர பிரதானின் துறை சார்ந்த அலட்சியமே, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குக் காரணம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலம் நடந்துள்ள போதிலும், மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

we-r-hiring

​டெல்லியில் அதிகரிக்கும் போராட்டங்கள் – சோனம் வாங்சுக் கவலைக்கிடம்
​டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பு சார்பிலும், பிற மாநில அமைப்புகள் சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லடாக்கின் முன்னணிச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் நீட் எதிர்ப்பாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்களும் தொண்டர்களும் டெல்லியை நோக்கி நடைபயணமாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!​

​’தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’
​நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான்.  இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக தரப்பில் கனிமொழி போன்றோர் குரல் கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் முக்கியக் கட்சித் தலைவர்களான த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பிற தலைவர்கள் இன்னும் வலுவான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் ​பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடக்க வேண்டும் என்பதில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுத்து, டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு நேரடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

மோடி அரசை வீழ்த்த சர்வதேச சதியா? டெல்லி போராட்டத்தின் பின்னணியை போட்டுடைத்த ரங்கராஜ் பாண்டே!

MUST READ