Homeசெய்திகள்இந்தியாஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

-

- Advertisement -

நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மறுதேர்வு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டின் காரணமாக மத்திய அரசு அந்தத் தேர்வை ரத்து செய்திருந்தது. சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

we-r-hiring

இந்நிலையில், ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட், வழிகாட்டுதல்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு நடத்த வேண்டாம் என்றும், மாணவர்களின் மனஅழுத்தத்தை கருத்தில் கொண்டு மாற்று தீர்வுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இருந்தபோதிலும், தேசிய தேர்வு முகமை தற்போது மறுதேர்வு தேதியை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், நீட் முறைகேடு விசாரணையில் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மூலமாகவே வினாத்தாள் வழங்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

MUST READ