Homeசெய்திகள்இந்தியா3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல்...

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

-

- Advertisement -

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

we-r-hiring

நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மே 30-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளின் 3-ம் கட்டமாகும்.

முன்னதாக, முதல் கட்டமாக பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்றன. தற்போது 3-ம் கட்டமாக மேலும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

இம்முறை இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் சேர்க்கப்படவில்லை. அப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் காரணமாக பின்னர் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3-ம் கட்ட பணிகளில் சுமார் 3.94 லட்சம் பூத் லெவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் ஆவணங்களை சரிபார்க்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் இணைந்து எஸ்ஐஆர் பணிகளையும் மேற்கொள்வதன் மூலம் களப் பணியாளர்களை திறம்பட பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த 3-ம் கட்ட பணிகளில் டெல்லியும் இடம்பெற்றுள்ளது. டெல்லிக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “அனைத்து தகுதியான வாக்காளர்களும் எஸ்ஐஆர் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது விவரங்களை உறுதி செய்ய தேவையான படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக நடைபெற்ற முதல் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் பிஹாரில் மட்டும் சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல், 2-ம் கட்ட பணிகளில் உத்தரப் பிரதேசத்தில் 2.04 கோடி வாக்காளர்களும், மேற்குவங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல மாநில தேர்தல்களில் தமிழகம், கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…

MUST READ