Homeசெய்திகள்இந்தியாஎதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?- விரிவான தகவல்!

எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Photo: INC

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி எதிராக, இணைந்துள்ள கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி தேர்தல் வியூகங்களை எதிர்க்கட்சிகள் வகுத்து வருகின்றனர்.

கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!

இந்த கூட்டத்தில், முதலமைச்சர்கள் பகவந்த் மான், மு.க.ஸ்டாலின், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

MUST READ