Homeசெய்திகள்இந்தியாகாலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

-

 

காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

பேடிஎம் வங்கியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவும், பணத்தை டெபாசிட் செய்யவதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பால், பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது என்றால் அதுவும் இல்லை.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

வரும் மார்ச் 15- ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வங்கியின் வாடிக்கையாளர் கணக்குகள் பிரீபெய்டு, வாலெட், பாஸ்ட்டேக் போன்றவற்றில் டெபாசிட் (அல்லது) கிரெடிட் பரிவர்த்தனைகள் (அல்லது) டாப் அப்கள் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பேடிஎம் வங்கி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் பேடிஎம் வங்கியின் செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி 29- ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

வாடிக்கையாளர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

MUST READ