
கனடாவில் வசிக்கும் சில பிரிவினைவாதிகளால் இந்திய வம்சாவளியினர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.10) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, காலிஸ்தான் தனி நாடு கோரி நடைபெறும் போராட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் உள்ள பயங்கரவாத சக்திகள் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்திய சமூகம் மற்றும் அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுப்போன்ற அச்சுறுத்தல்களை ஒழிக்க இருநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார்.
பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதம், வெளிநாட்டு தலையீடு பற்றி ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஜஸ்டின் ட்ரூடோவின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது.