Homeசெய்திகள்இந்தியாகாமன்வெல்த் விளையாட்டில் நீக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்... மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் வலியுறுத்தல்

காமன்வெல்த் விளையாட்டில் நீக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்… மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் வலியுறுத்தல்

-

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஹாக்கி,துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நிதி தட்டுப்பாடு காரணமாக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகள் நடைபெறாது போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியா ஆதிக்கம் செலுத்தும் இந்த போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!
File photo

இந்த நிலையில், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், ஹாக்கி, ஷூட்டிங், பேட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதே நல்லது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

P_chidambaram

கிளாஸ்கோ நகரம் ஒரு முழுமையான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்தால், அது ஏன் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பினை தேர்ந்தெடுத்தது என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், ஏன் அந்த நகரத்தை விலக்கிவிட்டு வேறு நகரத்திற்கு வழி செய்யவில்லை? என்றும் வினவியுள்ளார்.

காமன்வெல்த்

மேலும், காமன்வெல்த் போட்டிகளில் இருந்து முக்கிய விளையாட்டுகளை நீக்கப்பட்ட விவகாரத்தை இந்தியா அனைத்து மட்டங்களிலும் தீவிரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தற்போது கைவிடப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மீண்டும் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ