Homeசெய்திகள்இந்தியா'புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்'- துணைநிலை ஆளுநர் விளக்கம்!

‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!

-

 

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
Photo: Governor Of Telangana

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’ படத்தின் டீசர் வெளியானது!

அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரும் தீர்மானம் தொடர்பான கோப்புகள், கடந்த ஜூலை மாதம் 22- ஆம் தேதி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்தது. விடுமுறை நாளில் கோப்புகள் பெறப்பட்ட நிலையிலும், ஜுலை 23- ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்தேன். மாநில அந்தஸ்துக் குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளார். அதேபோல், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்த சூழலில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ