Homeசெய்திகள்இந்தியாமணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு

மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு

-

மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Violence in Nuh

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை பூதாகரமாகி அம்மாநிலமே வன்முறையால் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராம்க்கு அருகில் உள்ள நூஹ்வில், மத ஊர்வலத்தின்போது மோதல் வெடித்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. மேலும் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் மீது சமூக விரோதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 காவலர்கள் படுகாயமம் அடைந்துள்ளனர். மேலும் இரு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். இதனால் அசம்பாவிதங்களை தடுக்க அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “அமைதி காக்குமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பிக்க மாட்டார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

MUST READ