கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டிய வீடியோ வைரல்.நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை முதல் பொது வேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் போராட்டக்காரர்களிடமிருந்து அந்த வாகனங்களை விடுவித்து அனுப்பி வைத்துள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் வாட்டர் மெட்ரோ மற்றும் மெட்ரோ ரயில்கள் எந்த பிரச்சனையும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் பாதுகாப்பு கருதி தலையில் ஹெல்மெட் அணிந்து பேருந்து இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரூ.450 கோடி வங்கி கடன் மோசடி… பிரபல நடிகையின் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு!