spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா... 31 இடங்களில் முன்னிலை

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா… 31 இடங்களில் முன்னிலை

-

- Advertisement -

"200 இடங்களில் வென்று காட்டுங்கள்"- பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

we-r-hiring

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

"நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
File Photo

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் இருந்து வருகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள்
. மேற்குவங்க மாநிலம் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். நான்கு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றுள்ள நிலையில், வாக்கு வித்தியாசம் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

MUST READ