Homeசெய்திகள்இந்தியாசட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ., - வீடியோ வைரல்..

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ., – வீடியோ வைரல்..

-

மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் திரிபுராவில் அரங்கேறியுள்ளது..

திரிபுரா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தொடரின் போது கலந்துகொண்ட பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத், அவை நடவடிக்கைகளை பொருட்படுத்தாது தனது செல்போனில் ஆபாச படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துள்ளார். முதலில் செல்போனை மடியில் வைத்து ஆபாச படம் பார்க்கும் அவர், பின்னர் மேசை மீது வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது அவைநடவடிக்கைகளை அவர் கவனிக்கிரார்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ., - வீடியோ வைரல்..

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என விமர்சித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட ஆளும் மாநில பாஜக இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஜாதவ் லால் நாத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திரிபுரா பாஜக தலைவர் ராஜூ பட்டாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ