spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!

ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!

-

- Advertisement -

 

ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!

we-r-hiring

பஞ்சாப்பில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று தானாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டது. சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு பஞ்சாப் மாநிலம், பதான்பூர் நோக்கி ரயில் வேகமாகப் பயணித்தது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, கோஷியார்பூரில் உள்ள உச்சிப்பாசி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை போட்டு ரயிலை நிறுத்தியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்டு மறியல்!

முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் என்ஜினில் ஹாண்ட் பிரேக்கை செலுத்தாமல் ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் ரயில் தானாகப் புறப்பட்டது தெரிய வந்தது. எனினும், இந்த சம்பவத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள், விசாரணை நடைபெறுவதாகக் கூறினர்.

MUST READ