Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்!

முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்!

-

- Advertisement -

நம் சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பதற்கு நாம் பல வகையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அதன்படி நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நம் சருமத்தில் பலவகையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

அதனால் சருமத்தை அழகாக வைத்திருப்பதற்கு பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவோம்.

தற்போது ரோஜா பூவால் செய்யப்பட்ட ஸ்கிரப் ஒன்றை பயன்படுத்தி நம் சருமத்தை பராமரிக்கலாம்.முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்!

தேவையான பொருள்கள்: ரோஜாப்பூ – ஒரு கப்
பொடியாக்கிய சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ரோஜா இதழ்களை உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா இதழ்கள் , பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் இது ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் காயவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் ரோஜா பூவை போல மலர்ந்திருப்பதை பார்க்கலாம்.முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்!

இந்த ஸ்கிரப்பில் பயன்படுத்தும் ரோஸ் வாட்டரானது சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது. மேலும் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதற்கும் பருக்களை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சுருக்கங்கள், கருவளையங்கள் ஆகியவற்றையும் குறைக்க உதவுகிறது. இந்த ஸ்க்ரபினை தினமும் இரவில் தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.

MUST READ