மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப நெல்லிக்காய் சாற்றின் அபூர்வ மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம்;
நெல்லிக்காயினைப் பற்றிய தகவல்;
தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.”உள்ளங்கை நெல்லிக்கனி போல”, என்ற உவமை பழங்காலத்திலிருந்தே நம்முடைய வழக்கத்தில் உள்ள ஒன்றாக உள்ளது.அதியமான் கூட அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த வரலாறு தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. ஆப்பிளில் உள்ள சத்துக்கு இணையான அளவு நெல்லிக்காயிலும் கூடுதல் சத்துக்கள் இருக்கிறது.கடுகு சிறிதானாலும் காரம் அதிகம் என்ற பழமொழிக்கேற்ப பழம் சிறிதானாலும் அதிலுள்ள சத்துக்கள் மிக அதிகம்.நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் பருகுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்,அவற்றை தயாரிப்பது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
நெல்லிக்காய் -1/4 கிலோ
சர்க்கரை (அ)நாட்டு சர்க்கரை -100கிராம்
உப்பு -தேவையான அளவு
துளசி -சிறிதளவு
செய்முறை;
நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அத்துடன் சர்க்கரை,உப்பு,துளசி சேர்த்து மிக்ஸிசாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.பின்பு அவற்றை வடிகட்டி பருகலாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
காலையில் வெறும் வயிற்றில் பருகினால் பல விதமான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் பயன்கள்;
- நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் அதில் உள்ள புரோட்டீன்கள் கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்கிறது.
- நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- எலும்பின் பலத்தை அதிகரிக்கிறது.எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.
- வயிற்றுப் புண்களை ஆற்றும் ஆற்றல் உடையது.
- நெல்லிக்காய் சாறு காலையிலேயே குடிப்பதனால் அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
- அனைவரும் நெல்லிக்காய்சாறு குடிப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்.