இன்றுள்ள பலருக்கும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் பிரச்சினை இருக்கிறது. எனவே உடலில் ஹார்மோன்கள் சமநிலையை அடைய கருஞ்சீரக கசாயத்தை குடிக்கலாம். தற்போது கருஞ்சீரக கசாயம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

ஓமம் – 20 கிராம்
சோம்பு – 10 கிராம்
கருஞ்சீரகம் – 20 கிராம்
தண்ணீர் – 200 மில்லி லிட்டர்
கருஞ்சீரக கசாயம் செய்யும் முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஓமம், சோம்பு, கருஞ்சீரகம் ஆகிய பொருட்களை ஒரே பாத்திரத்தில் எடுத்து அதனை மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மூன்று பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வரும் வரை வருத்தபின் 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீரை 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின் இந்நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கசாயத்தை காலை, மாலை என இரு வேளைகள் குடித்து வர ஹார்மோன்கள் சமநிலையை அடையும்.
ஹார்மோனல் சமநிலை இன்மையால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த கசாயத்தை குடித்து மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
எனினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.