குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சோன் பப்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 4 கப்
பால் – 5 டேபிள் ஸ்பூன்
நெய் – 250 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
பாதாம் மற்றும் பிஸ்தா – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மைதா மாவு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ,அதில் 250 கிராம் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் நன்கு சூடானதும், கலக்கி வைத்துள்ள மாவை போட்டு பொன்னிறமாகும் வரை லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.
3. பின் அதை தனியாக எடுத்து சிறிது நேரம் சூடு குறைய வைக்க வேண்டும். அதே வேளையில், ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை மற்றும் பால் சேர்த்து பாகு போன்று காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. அந்தப் பாகு கெட்டியானதும், அதனையும் தனியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.
5. பின் ஒரு தட்டை எடுத்து அதில் நெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குளிர வைத்துள்ள மாவை, சக்கரைப்பாகுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
6. அவ்வாறு கலக்கும் போது மாவானது நீளநீளமாக சுருண்டு வரும். குறைந்தது ஒரு இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளறி விட வேண்டும்.
7.பின் அதனை நெய் தடவிய தட்டில் ஊற்றி அதன் மேல் ஏலக்காய் தூளை தூவி சதுர வடிவமாக வெட்டி அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரிக்க வேண்டும். இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி.