ஞாபக மறதி என்பது பொதுவாகவே வயதானவர்களுக்கு ஏற்படக்கூடியது. ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே ஞாபக மறதி பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது.
ஒரு செயலை செய்யும் போது மனதை ஒரு நிலையாக வைத்திருக்க வேண்டும். முழு ஈடுபாட்டுடன் கவனத்தை சிதறவிடாமல் ஒரு செயலை செய்ய வேண்டும். செய்கின்ற செயலில் ஈடுபாடில்லாமை, நிதானமில்லாமை போன்றவை தான் மறதிக்கு காரணமாக அமைகிறது.

எடுத்துக்காட்டாக, சாப்பிட்டுக்கொண்டே புத்தகம் படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது, பாடல் கேட்டு கொண்டே தூங்குவது இவையெல்லாம் மூளையின் கூர்மையை குறைக்கிறது. எந்த செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலில் கருத்துடனும் கவனத்துடனும் இருப்பதுதான் மறதிக்கு நல்ல தீர்வு.
ஞாபக மறதி வராமல் தடுக்க, முதலில் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன், அன்று முழுவதும் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்க்க முயற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஞாபக மறதி குறைந்து ஞாபக சக்தி அதிகமாகும். அதுமட்டுமில்லாமல் இரவில் மன அமைதியுடன் நிம்மதியாக தூங்க வேண்டும். தூங்கி எழுந்தவுடன் களைப்பு நீங்கி மூளையானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பசுவின் நெய், பசும்பால், வல்லாரைக்கீரை, வசம்பு, நெல்லிக்காய் போன்றவைகள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். இதை நாம் உண்ணும் உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கலாம்.