Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

-

ஆண்களுக்கு இருக்கும் தீரா பிரச்சனையில் ஒன்று சொட்டை. இன்றுள்ள காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட சொட்டை பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட சில தீர்வுகளை தற்போது காண்போம்.

1. ஆமணக்கு எண்ணெய்
சொட்டை தலைக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கு எண்ணெய். இதில் உள்ள மருத்துவ குணங்களால் முடியை நன்கு வளர செய்வதுடன் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. மேலும் பொடுகு பிரச்சனையையும் சரி செய்கிறது. ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு எடுத்து சூடாக்கி, மிதமான சூட்டில் இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து வர சொட்டை ஏற்பட்ட இடத்தில் நன்றாக முடி வளரும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

2. கற்றாழை
பொதுவாக கற்றாழை தலை முடி வளர்வதற்கு பெரிதும் உதவுகிறது. சொட்டை விழுந்த இடத்தில் கற்றாழையை 15 நிமிடம் கழித்து மசாஜ் செய்து குளித்து வந்தால் தலைமுடிவு உதிர்தல் மற்றும் பொடுகு போன்றவை குணமாகும்.

3. கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணியில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலை மிக குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது. முடி உதிர்வை தடுப்பதற்கு கரிசலாங்கண்ணி முக்கிய பங்காற்றுகிறது. எனவே கரிசலாங்கண்ணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆற வைத்து அதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வர சொட்டை பிரச்சனை குணமடையும்.வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

4. செம்பருத்தி
செம்பருத்தி பூவானது அனைவருக்குமே எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை. உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்யும் தன்மை செம்பருத்தி பூவிற்கு உண்டு. எனவே செம்பருத்தி பூவினை அரைத்து குளித்து வர அதிக நன்மை கிடைக்கும். மேலும் செம்பருத்தி பூவை காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வர நன்கு முடி வளரும்.

இந்த முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

MUST READ