Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தினமும் சுறுசுறுப்பாக இருக்க மூலிகை தேநீர் குடிங்க!

தினமும் சுறுசுறுப்பாக இருக்க மூலிகை தேநீர் குடிங்க!

-

தினமும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு மூலிகை தேநீர் குடித்து வரலாம். தற்போது மூலிகை தேநீர் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தினமும் சுறுசுறுப்பாக இருக்க மூலிகை தேநீர் குடிங்க!மூலிகை தேநீர் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

உலர் ரோஜா – 50 கிராம்
உலர் செம்பருத்தி பூ – 50 கிராம்
உலர் தாமரை பூ – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
தண்ணீர் – 200 மி.லி

செய்முறை:

மூலிகை தேநீர் செய்ய முதலில் கொடுக்கப்பட்ட பொருட்களின் அளவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வருத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பின் 200 மில்லி லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிதமான தீயில் 100 மில்லி லிட்டர் தண்ணீராக வற்றி வரும் வரை சூடு படுத்த வேண்டும்.

அதே சமயம் தண்ணீரில் 2 தேக்கரண்டி அளவு அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.தினமும் சுறுசுறுப்பாக இருக்க மூலிகை தேநீர் குடிங்க!

நன்கு கொதித்த பின் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது அருமையான மூலிகை தேநீர் தயார். இதனை தினமும் குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

இருந்தபோதிலும் இந்த தேநீரை பருகுவதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ