Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?

சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?

-

சுவையான மைசூர் பாக் செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
நெய் – 250 கிராம்
தண்ணீர் – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்பசுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?

செய்முறை :

மைசூர் பாக் செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கிவிட வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.

பின் அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சர்க்கரையானது பாகு பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.

பாகு தயாரானதும் அதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

அதன் பிறகு கடலை மாவை எடுத்து ஒரு கடாயில் சேர்த்து அத்துடன் நெய் கலந்து நன்கு வறுக்க வேண்டும்.

எண்ணெய் மற்றும் நெய் கலந்த சர்க்கரை பாகினை வறுத்த கடலை மாவில் சேர்த்து கட்டி சேராமல் கிளறி விட வேண்டும்.

அதேசமயம் ஒரு அகன்ற தட்டினை எடுத்து அதில் நெய் தடவி வைத்துக்கொள்ள வேண்டும்.சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?

இப்போது அடுப்பில் இருக்கும் மாவு கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின்பு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான மைசூர் பாக் தயார்.

இதனை தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் செய்து பார்க்கலாம். குழந்தைகளும் இந்த ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

MUST READ