தேவையான பொருட்கள்;
சின்ன வெங்காயம் -15

தக்காளி -3
புளி -எலுமிச்சை பழ அளவு
கறிவேப்பிலை -1 கொத்து
கடுகு – ½ ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் -3 ஸ்பூன்
மல்லித் தூள் -2 ஸ்பூன்
பூண்டு – ஒரு கட்டி
எண்ணெய் –தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;
கடலை பருப்பு -2 ஸ்பூன்
துவரம் பருப்பு –2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
மல்லி -1 ஸ்பூன்
இந்த பொருட்களையெல்லம் கடாயில் போட்டு பொன்நிறமாக வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மசாலாவை அனைத்து வகையான கார குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்முறை;
வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சுண்டவத்தலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை,பூண்டு,ஆகியவற்றை போடவும்,பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் மிளகாய் தூள் ,புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் சுண்டவத்தலை போட்டு,அதனுடன் அரைத்த மசாலாவை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.எண்ணெய் திரிந்து வந்ததும் சுவையான சுண்டைக்காய்வத்தல் குழம்பு ரெடி.
சுண்டக்காய் வத்தலின் நன்மைகள்;
- வயிறு உப்சத்தை சரி செய்யும்.
- செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது.
- மூலம் மற்றும் சுவாச பிரச்சனைகளைப் போக்கும்.
- நுரையீரலை பலப்படுத்துகிறது.