spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

-

- Advertisement -

தேவையான பொருட்கள்;

கோதுமை மாவு -2 கப்

we-r-hiring

நெய்                 -200மிலி

சர்க்கரை          -5 கப்

முந்திரி            -50கிராம்

செய்முறை;

கோதுமைமாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.பிறகு  அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து அந்த மாவு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

ஊற வைத்த மாவினை நன்றாக பிசைந்துக் கொண்டே இருந்தால் கோதுமை மாவிலிருந்து கோதுமை பால்  கிடைக்கும். அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த பாலினை இரவு முழுவதும் புளிக்க வைத்து மேலே உள்ள தண்ணீரை எடுத்து விட வேண்டும்.

 

அந்த பாலினை நன்றாக கிளறி விட வேண்டும்.ஒரு அடிகனமான கடாயினை எடுத்துக் கொள்ளவேண்டும்.அதில் பாலினை ஊற்றி நன்றாக கிளறி விட்டுக்கிட்டே இருக்க வேண்டும்.ஒரு 15 நிமிடம் வரை கைவிடாமல் கிளற வேண்டும்.இந்த பால் கெட்டியாகும் வரை கிளறி கெட்டியானதும் 3 ½  கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் மீதமுள்ள 1 ½ கப் சர்க்கரையை வானலில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் சர்க்கரையை மட்டும் போட்டு நன்றாக கலக்கி  பொன்நிறமாக நுரைவரும் பதத்தில் எடுத்து பாலில் ஊற்றவும்.அதில் நெய் சேர்த்து  நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.நெய்யினை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.வருத்த முந்திரியினை சேர்த்து கலக்கவும்.இப்போது கோதுமை மாவில் செய்த  சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி.

 

 

MUST READ