Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஃப்ரைடு இடியாப்பம் செய்வது எப்படி?

ஃப்ரைடு இடியாப்பம் செய்வது எப்படி?

-

- Advertisement -

தேவையான பொருள்கள்:

இடியாப்பம் – 6
வெங்காயம் – 2
தக்காளி – 2
கேரட் – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2
முட்டை – 3
பால் – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் தேவைக்கேற்பஃப்ரைடு இடியாப்பம் செய்வது எப்படி?

செய்முறை:

1. ஃப்ரைடு இடியாப்பம் செய்வதற்கு முதலில் ஆறு இடியாப்பத்தையும் எடுத்து சிறிதளவு பால் தெளித்து உதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.

2. அடுத்ததாக கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3. அதன் பின் கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி பொன்னிறமாக வரும்வரை நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்க வேண்டும். காய்கறிகளுக்கு தேவையான உப்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகிய இரண்டையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.ஃப்ரைடு இடியாப்பம் செய்வது எப்படி?

5. காய்கறிகள் நன்கு வெந்து வந்தவுடன் அதில் முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். முட்டைக்கு தேவையான உப்பினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையும் நன்கு வெந்து வந்தவுடன், உதிரியாக்கி வைத்திருந்த இடியாப்பத்தை அதில் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது காரசாரமான ஃப்ரைடு இடியாப்பம் ரெடி.

குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

MUST READ