Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் hb level அதிகரிக்க கேழ்வரகு லட்டு;

ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் hb level அதிகரிக்க கேழ்வரகு லட்டு;

-

கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;

கேழ்வரகு மாவு-ஒரு கப்

வேர்கடலை   -1/2 கப்

வெல்லம்        -1/2 கப்

எள்                   -4டேபிள் ஸ்பூன்

முந்திரி            -20கிராம்

நெய்                -தேவையான அளவு

உப்பு                -தேவையான அளவு

செய்முறை;

  •  கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்           சேர்த்து நன்றாக அடைப் பதத்திற்க்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை அடைத் தட்டுவதுப்போல தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் தடவி சுட்டு எடுக்கவும்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக ஆற வைக்கவும்.
  • அடையையும் ,வருத்த வேர்கடலையும் , மிக்ஸிசாரில் போட்டு அத்துடன் வெல்லம், சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். எள்ளை மிக்ஸிசாரில் போட்டு அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையுடன் சிறிது நெய் மற்றும் முந்திரி சேர்த்து லட்டுவாக பிடித்துகொள்ளவும்.இப்போது கேழ்வரகு லட்டு தயார்.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கேழ்வரகின் பயன்கள்;

  • புரதச்சத்து மிகுந்தது.
  • உடல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  • உடல் சூட்டைக் குறைக்கிறது.
  • தோல் வலுப்பெற உதவுகிறது.

MUST READ