Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

-

- Advertisement -

சித்தரத்தை மூலிகையில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1) சிற்றரத்தை 2) பேரத்தை. இந்தியாவில் பயிரிடப்படும் இந்த மூலிகையின் வேர் மருத்துவ குணம் நிறைந்தது. சித்தரத்தை மூலிகையானது பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தரத்தையானது கிழங்கு வகையைச் சார்ந்தது. இவை பார்ப்பதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை போன்று தான் இருக்கும்.சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

1. இந்த சித்திரத்தை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

2. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

3. சித்தரத்தை கோழை மற்றும் கபம் ஆகியவற்றை தீர்க்கும். உடல் சூட்டை தணிக்கும்.

4. செரிமான பிரச்சனையை சரி செய்து பசியை தூண்ட சித்திரத்தை உதவுகிறது.

5. சித்த வைத்தியர்கள் இந்த சித்தரத்தையினை வாதம், இழுப்பு, காய்ச்சல், இருமல் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுத்துவார்கள்.

6. குறிப்பாக இந்த சித்தரத்தை நெஞ்சில் இருக்கும் கபத்தை வெளியேற்ற பயன்படுகிறது.

7. மூச்சுக்குழல் மற்றும் தொண்டையில் உள்ள சளிகளையும் வெளியேற்ற இது உதவுகிறது.சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

8. கக்குவான் இருமல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு சித்தரத்தை அரைத்து தேனில் கலந்து கொடுத்து வந்தால் எவ்வித இருமலும் குணமடையும்.

9.சித்தரத்தை அதிக மணம் நிறைந்தவையாக இருப்பதால், இதனை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம்.

10. சுவாச பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

11. இந்த சித்தரத்தை அதிக மணம் கொண்ட காரணத்தால் பல்வேறு ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

மேலும் இதில் குறிப்பிட்ட மருத்துவ முறையை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனே மருத்துவரை அணுகவும்.

MUST READ