சங்குப்பூ இலைகள் துவர்ப்பு சுவை உடையவை. இவை குடல் புழுக்களை கொல்லும். கண் நோய், மந்தம் போன்றவற்றை குணப்படுத்தும். சங்கு பூவின் விதைகள் புளிப்பாகவும் மனமுள்ளதாகவும் இருக்கும். இவை சர்பத் போன்ற பான வகைகளில் சங்குப்பூ உடல் வலிமைக்காக சேர்க்கப்படுகிறது. இது பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும், தட்டையான காய்களையும் உடையது. சங்குப்பூவில் வெள்ளை நிறமான மலர்களும் நீல நிறமான மலர்களும் உள்ளன. இவை சங்கு புஷ்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க.
1. சங்குப்பூ வேரினை 40 கிராம் அளவு எடுத்து நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அந்தத் தண்ணீர் கால் லிட்டராக வற்றி வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். பின் அதனை மூணு தேக்கரண்டி அளவு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆறு முறைகள் ஒரே நாளில் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமடையும்.
2. சங்குப்பூ இலைகளை தேவையான அளவு எடுத்து விளக்கெண்ணையில் வதக்கி வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் வீக்கம் குறையும்.
3. யோனி புண்கள் குணமடைய சங்கு பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, தாங்குகிற சூட்டில் புண்களை கழுவி வர விரைவில் குணமடையும்.
வெள்ளைப்படுதல் பால்வினை நோய் உள்ளவர்கள் யோனியில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
4. சங்குப்பூ விதைகளை தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு வெந்நீரில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர இரைப்பு நோய் குணமாகும்.
இம்முறைகளை ஒரு முறை செய்து பார்த்து விட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனே மருத்துவரை அணுகவும்.