spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்

பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்

-

- Advertisement -

எதற்க்கெடுத்தாலும் அழும் குழந்தையை பெற்றோர்கள் எப்படி சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்கு சூப்பர் டிப்ஸ்.பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்

குழந்தைகள் பலவேறு காரணங்களால் அழுகின்றனர்  பசி, சோர்வு, தூக்கக்குறைவு, ஆபத்து உணர்வு, மருந்து தேவையின்மை, சுற்றுச்சூழலில் மாற்றங்கள் அல்லது மனநிலைக் கோளாறு போன்றவை பொதுவானவை. இது பல வீடுகளில் காணப்படும் பொதுவான விஷயம் என்றாலும், அதை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

we-r-hiring

ஏனென்றால் குழந்தைகள் அழுவது பலவீனம் அல்ல. அது ஒரு வகையான குழந்தை தனது தேவையை அல்லது உணர்வை சொல்ல வார்த்தைகளை கண்டுப்பிடிக்க முடியாத போது, அழுதல் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றது. அதனால் முதலில் இவ் அடிப்படைக் காரணங்களை கண்டுபிடித்தல் அவசியம்.

குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர்களுக்காக உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

பெற்றோர்களே உங்கள் குழந்தை அழுகிறார்கள் என்றால் முதலில் அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். அதாவது பசி, சோர்வு, தூக்கமின்மை, பயம் போன்ற பல காரணங்களாலும் குழந்தைகள் அழுவார்கள். குழந்தையாக இருக்கும்போது இப்படி அழுவது இயல்பான விஷயம் தான். ஆனால் வயது கூட கூட இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் நீங்கள் தர்மசங்கடமாக உணருவீர்கள்.

முதலில் செய்யவேண்டியது, அமைதியாக அணுகுங்கள். வேகமாக வலித்து பின்வாங்குவது குழந்தையை மேலும் பதற்றப்படுத்தும், பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது குழந்தைகள் அழுது அடம் பிடித்தால், கேட்பதை உடனே வாங்கி கொடுப்பது. இந்த பழக்கமானது, அழுதால் விரும்பியதை உடனே பெறலாம் என்ற எண்ணம் குழந்தையின் மனதில் பழக்கமாக உருவாகும்.

அன்பு, பொறுமை, தெளிவான தகவல் தொடர்பு போன்றவை இருந்தால் குழந்தைகள் தங்களது உணர்வுகளை உங்களிடம் தைரியமாக வெளிப்படுத்துவார்கள். மேலும் அவர்கள் அழுகையையும் கட்டுப்படுத்துவார்கள். எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தை அழும்போது அவர்களை கட்டிப்பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். பிறகு அவர்களது தேவை என்ன என்று கேளுங்கள்.

எனவே, இப்படி வாங்கி கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுங்கள். சிறிது நேரத்தில் குழந்தை அழுவதை நிறுத்தி விடும். உங்கள் பதிலில் நிலைத்தன்மை தேவை. அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும். தினமும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். இது அவர்களுக்கு உங்கள் மீதான  நம்பிக்கையை வளர்க்கும்.

பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

MUST READ